நாட்டின் 6வது வந்தே பாரத் ரயில்...ந்த மாநிலத்தில் தெரியுமா? தொடங்கி வைத்த பிரதமர் மோடி!

நாட்டின் 6வது வந்தே பாரத் ரயில்...ந்த மாநிலத்தில் தெரியுமா? தொடங்கி வைத்த பிரதமர் மோடி!

நாட்டின் 6வது வந்தே பாரத் ரயில் சேவையை மகாராஷ்டிராவின் நாக்பூரில் பிரதமர் மோடி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.


சமீபத்தில் ஐந்தாவது வந்தே பாரத் ரயில் சேவை, சென்னை சென்ட்ரல் - மைசூரு இடையே தொடங்கப்பட்டு தற்போது இயக்கத்தில் உள்ளது. இந்நிலையில் பெரம்பூர் ஐசிஎஃப் ஆலையில் தயாரான, ஆறாவது வந்தே பாரத் ரயில், தென்கிழக்கு மத்திய ரயில்வேயிடம் சமீபத்தில் ஒப்படைக்கப்பட்டது. இந்த ரயில் சத்தீஸ்கரின் பிலாஸ்பூர் - மகாராஷ்டிராவின் நாக்பூர் இடையே இயக்க முடிவெடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து முதற்கட்டப் பணிகள் முடிக்கப்பட்ட இந்த ரயில் சேவையை நாக்பூரில் இருந்து கொடியசைத்து பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். 

இதையும் படிக்க: ”ரௌத்திரம் பழகு..” முண்டாசுக் கவி பாரதியாரின் பிறந்தநாள் இன்று...!

இதைத்தொடர்ந்து நாக்பூர் மெட்ரோ ரயில் திட்ட முற்கட்டப்பணிகளை தொடங்கிவைத்த பிரதமர் மோடி, 6 ஆயிரத்து 700 கோடி ரூபாய் மதிப்பிலான இரண்டாம் கட்டத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து மெட்ரோவில் டிக்கெட் எடுத்தபின் ரயிலில் பயணம் மேற்கொண்ட அவர், மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

தொடர்ந்து ஷீரடி - நாக்பூர் இடையே 520 கிலோ மீட்டர் விரைவு சாலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். மகாராஷ்டிராவின் 10 மாவட்டங்களான அமராவதி, அவுரங்காபாத் உள்ளிட்ட முக்கியப்பகுதிகள் வழியே செல்லும் இந்த சாலை, இந்தியாவின் நீளமான விரைவுச் சாலைகளில் ஒன்று என தெரிவிக்கப்பட்டுள்ளது.