ஹரியானாவில் ஊரடங்கு தற்காலிகமாக வாபஸ்!

ஹரியானாவில் ஊரடங்கு தற்காலிகமாக வாபஸ்!

ஹரியானாவில் கலவரம் ஏற்பட்ட நுஹ் பகுதியில் ஊரடங்கு தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது. 

கடந்த மாதம் 31ம் தேதி ஹரியானா மாநிலத்தில் உள்ள  நுஹ் மாவட்டத்தில் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் ஊர்வலம் சென்றபோது, கலவரம் வெடித்ததில் ஊர்காவல் படையினர் மற்றும் இஸ்லாமிய மதகுரு உள்ளிட்ட 7 பேர் கொல்லப்பட்டனர். இதுதொடர்பாக இதுவரை குருகிராம், சோனா, நூஹ் உள்ளிட்ட மாவட்டங்களில் 216 பேர் கைது செய்யப்பட்ள்ளனர். ஆகஸ்ட் 8ம் தேதி வரை நுஹ்-ல் இணையசேவை தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் நூஹ், குருகிராம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பபட்டிருந்தது. 

இந்நிலையில், அத்தியாவசியப் பொருட்களை மக்கள் வாங்கும் வகையில் இன்று 3 மணி நேரத்திற்கு ஊரடங்கு தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிக்க:அமைச்சர் வீட்டை முற்றுகையிட முயற்சி; தொழிலாளர்கள் கைது!