யமுனா நதியில் சிலைகளை கரைக்க டெல்லி அரசு தடை.!!

யமுனா நதியில் சிலைகளை கரைக்க டெல்லி அரசு தடை.!!

துர்கா பூஜையை யொட்டி யமுனா நதியில் கடவுள் சிலைகளைக் கரைக்கவும், பூஜைப் பொருள்களை போடவும் தடை விதித்து டெல்லி மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சிலைகளைக் கரைக்கும் போது அதிலுள்ள வண்ணப் பூச்சுகள் மற்றும் ரசாயனங்கள் தண்ணீரில் கலந்து சுற்றுச்சுழலுக்கும், உடல் ஆரோக்கியத்துக்கும் கேடு விளைவிப்பதாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

தடையை மீறி யமுனையில் சிலைகளை கரைப்பவர்களுக்கு ஆறு ஆண்டுகள் சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும் என டெல்லி மாசுக்கட்டுப்பாடு வாரியம் எச்சரித்துள்ளது.