3-ம் அலையில் டெல்டா பிளஸ் பாதிப்பு அதிகரிக்கும்…  

மகாராஷ்டிராவில் டெல்டா பிளஸ் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 76 ஆக உயர்ந்துள்ளது.

3-ம் அலையில் டெல்டா பிளஸ் பாதிப்பு அதிகரிக்கும்…   

மகாராஷ்டிராவில் டெல்டா பிளஸ் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 76 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா 3 ஆம் அலைக்கு டெல்டா பிளஸ்காரணமாக அமைய கூடும் என நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர். இது 2 ஆம் அலைக்கு காரணமான டெல்டா மாறுபாட்டை காட்டிலும் மிக மோசமானது என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இந்த நிலையில் டெல்டா பிளஸ் பரவல் குறித்து நாடு முழுவதும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மகாராஷ்டிராவில் டெல்டா பிளஸ் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 76 ஆக அதிகரித்துள்ளதாக மகாராஷ்டிரா சுகாதார துறை உறுதிப்படுத்தியுள்ளது.

டெல்டா பிளஸ் மாறுபாட்டுக்கு மகாராஷ்டிராவில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் பரவலை கட்டுப்படுத்த அம்மாநில அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.