பாதயாத்திரை சென்ற பக்தர்கள்... ஆற்றை கடக்க முயன்ற போது வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பரிதாபம்!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள காவிரி ஆற்றை கடக்கும் போது பக்தர்கள் பலர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

பாதயாத்திரை சென்ற பக்தர்கள்... ஆற்றை கடக்க முயன்ற போது வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பரிதாபம்!!

கர்நாடகா மாநிலத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கனகபுரா, பெரிய ஆலஹள்ளி,  வழியாக மகாதேஸ்வர மலைக்கு பாதயாத்திரையாக சென்று கொண்டிருந்தனர்.

அப்போது ஆற்றை கடக்க முயன்ற பக்தர்கள் சிலர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். இந்நிலையில் தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இதில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் காணாமல் போன மற்ற பக்தர்களை வனத்துறையினர் தேடி வருகின்றனர். மகா சிவராத்திரியை முன்னிட்டு  பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கு, காவேரி ஆற்றை  கடக்க வனத்துறையினர், எந்த முன்னெச்சரிக்கை ஏற்பாடும் செய்துதரவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.