திருப்பதியில் பெய்து வரும் கனமழையால் சாமி தரிசனத்திற்கு சென்ற பக்தர்கள் அவதி...

திருப்பதியில் பெய்து வரும் கனமழையால் சாமி தரிசனத்திற்கு சென்ற பக்தர்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர்.

திருப்பதியில் பெய்து வரும் கனமழையால் சாமி தரிசனத்திற்கு சென்ற பக்தர்கள் அவதி...

தெற்கு ஆந்திராவில் பல்வேறு பகுதிகளிலும் நேற்று இரவு முதல் கனமழை கொட்டி வருகிறது. குறிப்பாகத் திருப்பதி திருமலையில் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் அங்கு பல்வேறு இடங்களிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. மேலும், பல முக்கிய சாலைகளில் மரங்கள் விழுந்துள்ளதால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் பக்தர்கள் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் அதனை கடக்க முடியாமல் தத்தளித்த பக்தர்கள் கயிறு மூலம் மீட்கப்பட்டனர். திருமலையில் உள்ள ஜபாலி ஆஞ்சநேய சாமி கோவிலில் வெள்ளம் புகுந்ததால் சாமி சிலையானது தண்ணீரில் மூழ்கியுள்ளது. 

திருமலையில் உள்ள பிரதான கோவிலை ஒட்டிய நான்கு மாட வீதிகள், வைகுந்தம் அறை என அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. திருமலையில் சிக்கித் தவிக்கும் பக்தர்களுக்கு இலவச உணவு மற்றும் தங்குமிட வசதிகளை திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் செய்து வருகின்றனர்.வெள்ளம் மற்றும் நிலச்சரிவைத் தொடர்ந்து திருமலை மலைக்கு செல்லும் இரண்டு சாலைகளும் மூடப்பட்டுள்ளன. வெள்ளநீரில் வாகனங்கள் அடித்து செல்லப்பட்ட நிலையில் இளைஞர்கள் ஆபத்த உணராமல் செல்ஃபி எடுத்த வண்ணம் உள்ளனர்.