டெல்லி சட்டப்பேரவையிலிருந்து செங்கோட்டையை இணைக்கும் பழங்கால சுரங்கப்பாதை கண்டுபிடிப்பு...

டெல்லி சட்டப்பேரவையிலிருந்து செங்கோட்டையை இணைக்கும் பழங்கால சுரங்கப்பாதை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

டெல்லி சட்டப்பேரவையிலிருந்து செங்கோட்டையை இணைக்கும் பழங்கால சுரங்கப்பாதை கண்டுபிடிப்பு...

1912ஆம் ஆண்டு வரை இந்தியாவின் தலைநகரமாக கொல்கத்தா இருந்தது. பின்னர் டெல்லி தலைநகரமாக அறிவிக்கப்பட்டது. அங்கிருந்த மத்திய சட்டப்பேரவை, 1926ஆம் ஆண்டில், நீதிமன்றமாக மாற்றப்பட்டது. அந்த காலக்கட்டத்தில் சுதந்திர போராட்ட வீரர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த, அவர்கள் செங்கோட்டையில் இருந்து சுரங்கம் வழியாக கொண்டு ஆங்கிலேயர்கள் கொண்டு வந்ததாகக் கூறப்படுகிறது.  இத்தகவலை பலர் தெரிவித்து வந்த நிலையில், அந்த சுரங்கம் எங்குள்ளது என்பதை கண்டுபிடிக்க எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாமல் இருந்தது.

இதனிடையே, கெஜ்ரிவால் அரசில் சட்டப்பேரவை சபாநாயகராக பொறுப்பேற்றுக்கொண்ட ராம் நிவாஸ் கோயல், நுழைவாயிலை கண்டுபிடிப்பதற்கான பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். அதன் பயனாக தற்போது சுரங்கத்தின் நுழைவாயில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. பழமைவாய்ந்த இந்த சுரங்கம் தற்போது சேதமடைந்திருப்பதாகவும், இதில் உள்ள அறை புனரமைக்கப்பட்டு, ‘தியாகிகளின் நினைவு ஆலயமாக’ மாற்றப்படும் என ராம் நிவாஸ் கோயல் தெரிவித்துள்ளார். அதன்பின்னர் அந்த இடம் பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தப்படவுள்ளது.

அதுமட்டுமல்லாது டெல்லியில் புதிதாக மேற்கொள்ளப்பட்ட மெட்ரோ, பாதாளச்சாக்கடை உள்ளிட்ட பணிகள் காரணமாக சுரங்கப்பாதையின் இறுதி பகுதி வரை செல்ல முடியாத நிலை இருப்பதாகவும், அடுத்தாண்டு ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் இந்த  சுரங்கப்பாதை புனரமைக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.