உக்ரைன் எல்லைக்குள் நுழைய வேண்டாம் - ஏர் இந்தியா விமானத்திற்கு எச்சரிக்கை!!

இந்தியர்களை மீட்டு வர உக்ரைன் சென்ற ஏர் இந்தியா விமானம், போர் காரணமாக மீண்டும் டெல்லி திரும்பியுள்ளது. 

உக்ரைன் எல்லைக்குள் நுழைய வேண்டாம் - ஏர் இந்தியா விமானத்திற்கு எச்சரிக்கை!!

உக்ரைனில் உள்ள இந்தியர்களை இந்தியா அழைத்து வரும் பணியில் ஏர் இந்தியா விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, ரஷ்யாவில் இருந்து மேலும் சில இந்தியர்களை மீட்டு, இந்தியாவிற்கு அழைத்து வர ஏர் இந்தியா விமானம் உக்ரைன் புறப்பட்டது.

ஆனால், தற்போது உக்ரைன் மீது ரஷ்யா வான்வழி தாக்குதல்களை தொடங்கியிருக்கும் நிலையில், அந்நாட்டின் விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்க முடியாத நிலை ஏற்பட்டது. உக்ரைனின் கீவ் நகரை நெருங்கி கொண்டிருந்த போது மோசமான வான் தாக்குதல் தொடர்வதால் உக்ரைன் எல்லைக்குள் நுழைய வேண்டாம் என ஏர் இந்தியா விமானத்திற்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதை தொடர்ந்து விமானம் திரும்பியது. இதனால் உக்ரைனில் சிக்கியிருக்கும் இந்தியர்களை மீட்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.  

இதனிடையே, உக்ரைனின் நூற்றுக்கணக்கான முக்கிய இணையதளங்களில் தகவல் அழிப்பு டூல் மால்வேர் மூலம் ரஷ்யா சைபர் தாக்குதலை நடத்தியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல் உக்ரைன் அரசின் முக்கிய இணையதளங்கள் அனைத்தும் முடக்கப்பட்டிருப்பது சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.