உள்நாட்டு விமான போக்குவரத்து சேவையை உயர்த்தலாம்..!  

உள்நாட்டு விமான போக்குவரத்தை 75 சதவீதமாக உயர்த்தி மத்திய சிவில் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா உத்தரவிட்டுள்ளார்.

உள்நாட்டு விமான போக்குவரத்து சேவையை உயர்த்தலாம்..!   

உள்நாட்டு விமான போக்குவரத்தை 75 சதவீதமாக உயர்த்தி மத்திய சிவில் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா உத்தரவிட்டுள்ளார்.

நாட்டில் கொரோனா தாக்கம் காரணமாக விமான போக்குவரத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மக்கள் பயணங்களை தவிர்த்து வருவதால் வழக்கத்தை காட்டிலும் குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் 65 சதவீதமாக இருந்த உள்நாட்டு விமான போக்குவரத்தை 75 சதவீதமாக உயர்த்தி அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா உத்தரவிட்டுள்ளார். அதன்படி ஆகஸ்ட் 26 முதல் உத்திர பிரதேசத்தில் பரேலி பகுதியில் இருந்து தலைநகர் டெல்லிக்கு 7 நாட்களும் விமானங்கள் இயக்கப்படும் எனவும்  மும்பைக்கு 4 நாட்கள் மற்றும் பெங்களூருக்கு 3 நாட்களும் விமானங்கள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விமானங்கள் பரேலி மட்டுமின்றி நைனிடால், ராணிகேத் போன்ற பிற பகுதிகளை இணைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.