நீதிபதிகளை ’மை லார்டு’  என்று அழைக்க வேண்டாம் - உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அதிரடி! 

நீதிமன்றங்களில் நீதிபதிகளை மை லார்டு  என்று அழைக்க வேண்டாம் என ஒடிசா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார். 

நீதிபதிகளை ’மை லார்டு’  என்று அழைக்க வேண்டாம் - உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அதிரடி! 

நீதிமன்றங்களில் நீதிபதிகளை மை லார்டு  என்று அழைக்க வேண்டாம் என ஒடிசா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார். 

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் பொதுவாகவே நீதிமன்றங்களில் நீதிபதிகளை 
மை லார்டு  என்று அழைப்பது வழக்கம்.இந்த வழக்கம் இன்று தொடர்ந்து வருகிறது. 

இந்நிலையில் ஒடிசா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.முரளிதர், 
நீதிமனறத்தில் தன்னையோ தனது தலைமையிலான அமர்வின் மற்ற  நீதிபதிகளையோ மை லார்டு மற்றும் யுவர் ஆனர் என வேண்டாம் என்று கூறியுள்ளார்.

 ஐயா அல்லது சார் என்ற வார்த்தைகளை பயன்படுத்தி நீதிபதிகளை அழைப்பது போதுமானது என்று தெரிவித்துள்ளார். இதற்கு ஒடிசா உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்க செயலாளர் ஜே.கே.லென்கா  மற்றும் மற்ற வழக்கறிஞர்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.