ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள இந்தியர்களின் நிலை என்ன?  

ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு வர வரும்பினால் அவர்களை குடியமர்த்துவதற்கு தயாராக உள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் முழுவதும் தலிபான் பிடியில் சென்றுள்ள நிலையில், அங்கிருந்து தப்பிப்பதற்காக காபூல் விமானநிலையத்தில் ஆயிரக்கணக்கானோர் குவிந்துள்ளனர். இந்நிலையில் காபூலில் உள்ள 200க்கும் மேற்பட்ட இந்திய அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு படையினரை மீட்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாக வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி தெரிவித்துள்ளார். மேலும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த சீக்கியர்கள் மற்றும் ஹிந்துக்களுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளதாகவும் அவர்கள் விரும்பினால் இந்தியாவில் அவர்களை குடியமர்த்த தயாராக உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

காபூல் விமான நிலையத்தில் வர்த்தக விமானங்களை இயக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதால், ஆப்கானிஸ்தானிலிருந்து இந்தியர்களை அழைத்து வரும் பணி தாமதம் அடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதற்கு சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர் அதனைத் தொடர்பு கொள்வதற்கான தொலைப்பேசி எண்ணையும் வெளியிட்டுள்ளார்.