”அமெரிக்காவை ஈடுபடுத்துவது, சீனாவை நிர்வகிப்பது, ரஷ்யாவை நிர்வகிப்பது ‘சப்கா சாத்-சப்கா விகாஸ்’ என்ற இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை” எஸ். ஜெய்சங்கர்

”அமெரிக்காவை ஈடுபடுத்துவது, சீனாவை நிர்வகிப்பது, ரஷ்யாவை நிர்வகிப்பது ‘சப்கா சாத்-சப்கா விகாஸ்’ என்ற இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை” எஸ். ஜெய்சங்கர்

இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்கான சிந்தனையை மாற்ற வேண்டிய அவசியம் உள்ளது.

புத்தக வெளியீடு:

ஜெய்சங்கரின் 'தி இந்தியா வே: ஸ்ட்ராடஜீஸ் ஃபார் அன்சர்ட்டன் வேர்ல்ட்' புத்தகத்தின் குஜராத்தி மொழிபெயர்ப்பை வெளியிட விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர், மற்ற நாடுகளின் பிரச்னைகளில் இந்தியா தலையிடக் கூடாது என்ற எண்ணம் மாற்றப்பட வேண்டிய கோட்பாடாகும் என்று கூறியுள்ளார்.

எல்லை தாண்டிய சிந்தனை:

"இந்தியப் பெருங்கடலுக்கும் பசிபிக் பெருங்கடலுக்கும் இடையிலான கோடு வரைபடம்-அட்லஸில் மட்டுமே உள்ளது, ஆனால் உண்மையில் அப்படி எதுவும் இல்லை. நமது சிந்தனையில் வரலாற்றுக் கோடுகளுக்கு அப்பால் செல்ல வேண்டும்" என்று வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார்.

இந்தியாவின் கடல்சார் நலன்களைப் பற்றி விவாதிக்கும் போது இந்தியப் பெருங்கடலைப் பற்றி பேசுவதும், பசிபிக் பெருங்கடலைப் பற்றி பேசாமல் இருப்பதும் சிந்தனையின் வரம்பைக் காட்டுகிறது என்றும், இந்த வரலாற்றுச் சிந்தனையைத் தாண்டி இந்தியா செல்ல வேண்டும் என்றும் வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் கூறியுள்ளார். 

இந்தியா ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக இருப்பதால், இந்தியா நம்பிக்கையை எல்லையை கடந்து காட்ட வேண்டும், என்று கூறியுள்ளார். நம்பிக்கையின்மைக்குக் காரணம் நம்மைக் கட்டுப் படுத்தும் பழக்கவழக்கங்களே என்றும் தெரிவித்துள்ளார்.

புதிய சித்தாந்தம்:

”அமெரிக்காவை ஈடுபடுத்துவது, சீனாவை நிர்வகிப்பது, ரஷ்யாவை நிர்வகிப்பது ‘சப்கா சாத்-சப்கா விகாஸ்’ என்ற இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை” என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் ஜெய்சங்கர், "இதுவரை, நாம் பெருங்கடலைப் பற்றி நினைக்கும் போதெல்லாம், இந்தியப் பெருங்கடலைப் பற்றி நினைக்கிறோம். கடல்சார் நலன்களைப் பற்றி பேசும்போதெல்லாம், நாம் இந்தியப் பெருங்கடலைப் பற்றி சிந்திக்கிறோம். அதைப் பற்றி மட்டுமே பேசுகிறோம்” எனக் கூறியுள்ளார்.  

"ஆனால் நமது வர்த்தகத்தில் ஐம்பது சதவீதத்திற்கும் அதிகமானவை கிழக்கே பசிபிக் பெருங்கடலுக்கு செல்கிறது. இந்தியப் பெருங்கடலுக்கும் பசிபிக் பெருங்கடலுக்கும் இடையே உள்ள கோடு அட்லஸ் வரைபடத்தில் மட்டுமே உள்ளது, ஆனால் உண்மையில் அப்படி எதுவும் இல்லை. நமது சிந்தனை எல்லைகளுக்கு அப்பால் செல்ல வேண்டும். இந்தோ-பசிபிக் என்பது உலகில் நடக்கும் ஒரு புதிய  கருத்தாகும்." என்றும் பேசியுள்ளார்.

புத்தகத்திலிருந்து கருத்து:

வெளியுறவுதுறை அமைச்சர் அவரது புத்தகத்தில் ஒரு அத்தியாயம் பற்றி பேசுகையில்” உலகில் மற்றவர்களின் பிரச்சனைகளில் நாம் தலையிடக்கூடாது என்பது ஒரு வகையான கோட்பாடாகும்.  பழக்கவழக்கங்கள் நம் நம்பிக்கையைக் காட்டாது.  1950கள் மற்றும் 1960 களில் நம்மிடம் திறன் இல்லை. ஆனால் சில நாட்களுக்கு முன்பு நாம் உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக மாறினோம்” என்று கூறியுள்ளார். 

வெளிவிவகார அமைச்சர் கூறுகையில், இந்தியாவின் முன்னேற்றம் ஒரு வகையில் நாம் முன்னேறுவதற்கான அளவுகோலாக இருப்பதால், நமது நலன்களை மேம்படுத்துவதற்கு நம்மால் முடிந்தவரை அனைவருடனும் உறவுகளைப் பேண வேண்டும் என்ற நிலையை அடைந்துள்ளோம் என்று பேசியுள்ளார். 

இதையும் படிக்க:  100 மடங்கு சிறந்த பாஜக!!!!