கல்விக்கடன் பயத்தினால் இன்ஜினியரிங் மாணவர் தற்கொலை... ஏழ்மையால் போலீசாரை இறுதி சடங்கை செய்ய சொன்ன பெற்றோர்...

கர்நாடக மாநிலம் மங்களூரு அருகே கல்விக்கடன் பயம் காரணமாக பொறியியல் கல்லூரி மாணவர் ஒருவர் விடுதியிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கல்விக்கடன் பயத்தினால் இன்ஜினியரிங் மாணவர் தற்கொலை... ஏழ்மையால் போலீசாரை இறுதி சடங்கை செய்ய சொன்ன பெற்றோர்...

பீகார் மாநிலம் பாட்னாவை சேர்ந்தவர் மாணவர் சௌரவ். இவர் மங்களூரு அருகேயுள்ள சீனிவாச நகர் பகுதியில் மத்திய அரசுக்கு சொந்தமான தேசிய தொழில்நுட்பக் கல்லூரியில் விடுதியில் தங்கி படித்து வந்துள்ளார். இந்நிலையில், இவரது அறை காலை 10 மணி ஆகியும் திறக்கப்படாததால், நண்பர்கள் ஜன்னல் கதவை திறந்து பார்த்த போது அவர் தூக்கில் தொங்கியபடி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் கதவை உடைத்து மாணவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த நிலையில், கல்விக்கடனை செலுத்துவது குறித்த பயத்தில் தற்கொலை செய்து கொள்வதாக அந்த மாணவர் கைப்பட எழுதிய கடிதம் ஒன்றை கண்டெடுத்தனர். அதில் தனது வங்கி கணக்கில் இருக்கும் 46 ஆயிரம் ரூபாய் பணத்தை வைத்து, கடனை அடைக்க தந்தைக்கு வேண்டுகோளும் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் மாணவர் இறந்தது குறித்த தகவல் தாய் தந்தைக்கு தெரிவிக்கப்பட்ட உடலை எடுத்துவந்து இறுதி காரியங்கள் செய்யும் பொருளாதார நிலை தங்களுக்கு இல்லை என்ற காரணத்தினால் தாங்களே இறுதி காரியங்களை செய்து விடுங்கள் என்று காவல்தறையிடம்  பெற்றோர்கள் கோரிக்கை வைத்ததை தொடர்ந்து, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து அடக்கம் செய்தனர்.