பெங்களூரு சென்ற பிரதமருக்கு உற்சாக வரவேற்பு.. ரூ.28 ஆயிரம் கோடி மதிப்புடைய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினர் பிரதமர்!!

பெங்களூருவில் 28 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ரயில் மற்றும் சாலை உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

பெங்களூரு சென்ற பிரதமருக்கு உற்சாக வரவேற்பு.. ரூ.28 ஆயிரம் கோடி மதிப்புடைய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினர் பிரதமர்!!

இரண்டு நாள் பயணமாக கர்நாடகாவிற்கு சென்ற பிரதமர் மோடிக்கு, பெங்களூருவில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

தொடர்ந்து பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கழகத்திற்கு சென்ற பிரதமர் மோடி, மூளை உயிரணு மேம்பாட்டு மையத்தை திறந்து வைத்தார். பின்னர், அம்பேத்கர் வணிகப்பள்ளியில் புதிய கட்டடத்தையும், அம்பேத்கர் சிலையையும் மோடி திறந்து வைத்தார்.

இதையடுத்து பெங்களூரு கொம்மகட்டா மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி, 28 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ரயில் மற்றும் சாலை உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர், பெங்களூருவில் 40 ஆண்டுகளுக்கு முன்பே செய்திருக்க வேண்டிய வளர்ச்சிப்பணிகளை, தற்போது முடிக்க தங்கள் அரசுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளதாக கூறினார். பெங்களூருவின் புறநகர் பகுதிகளையும் சிறந்த முறையில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். 

இதனிடையே சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, மைசூர் அரண்மனை வளாகத்தில், நாளை நடைபெறும் பிரம்மாண்டமான யோகா பயிற்சி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொள்ள இருக்கிறார்.