தனியார் பங்களிப்புடன் உலா ரயில் திட்டம்.. இந்தியாவில் உள்ள முக்கிய ஆன்மீக தலங்களுக்கு பயணம்!!

இந்தியன் ரயில்வே தனியார் நிறுவனத்துடன் இணைந்து பாரத் கௌரவ் திட்டம் என்கிற உலா ரயில் என்ற சிறப்பு புனித  யாத்திரை ரயிலை அறிமுகம் செய்துள்ளது.

தனியார் பங்களிப்புடன் உலா ரயில் திட்டம்.. இந்தியாவில் உள்ள முக்கிய ஆன்மீக தலங்களுக்கு பயணம்!!

இந்தியாவில் உள்ள முக்கியமான ஆன்மீக தலங்களை மொத்தமாக தரிசனம் செய்வதற்கு வசதியாக இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

முதல் ரயில் 23 ஆம் தேதி மதுரையில் இருந்து புறப்படுகிறது. முதல் ரயிலின் பயணத்திட்டமாக 12 நாட்கள் திட்டமடப்பட்டுள்ளது. திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம், சென்னை மற்றும் விஜயவாடா வழியாக  இந்தியாவின் முக்கியடான சுற்றுலாத்தளங்களுக்கு இந்த ரயில் செல்கிறது.

Budget, Standard, Comfortபட்ஜெட், ஸ்டாண்டர்ட், கம்ஃபோர்ட்   என மூன்று பிரிவுகளில் கட்டணத்திற்கு ஏற்ப வசதிகள் செய்து தரப்படுகிறது. இந்தியா முழுவதும் ஆன்மீக பயணம் மேற்கொள்ள விரும்பும் மக்கள் இந்த திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.