வேளாண்மைத் துறையின் கண்காட்சி தொடக்கம்...

புதுச்சேரி வேளாண் துறை சார்பில் மலர் மற்றும் காய்கறிக் கண்காட்சி தொடங்கியது.

வேளாண்மைத் துறையின் கண்காட்சி தொடக்கம்...

புதுச்சேரியில் வேளாண் துறை சார்பில் ஆண்டுதோறும் மலர், காய், கனி கண்காட்சி நடத்தப்பட்டு, அதன்படி இந்த ஆண்டுக்கான மலர், காய்கனி கண்காட்சி இன்று ரோடியர் மில் திடலில் தொடங்கியது.

இதனை துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் கலந்து கொண்டு பலூன்களை பறக்க விட்டோம் ரிப்பன் வெட்டியும் துவக்கி வைத்தனர்.

மேலும் படிக்க | கோயிலுக்கு செல்வதாய் கூறி பணம் வசூல்.... டாஸ்மாக்கில் ஆர்ப்பாட்டம்!!

இந்த மலர் கண்காட்சியில் புதுச்சேரி அரசின் தோட்டக்கலைத்துறை சார்பில் உருவாக்கப்பட்ட 33 ஆயிரம் மலர் செடிகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

இதில் கசேனியா, டைலார்டியா, பொரேனியா, டெர்பினா, ஸ்நாப்டிராகன், செலோசியா, சால்வியா, பெட்டுனியா என புதிய ரக பூஞ்செடிகளும் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது.

மேலும் படிக்க | தமிழ்நாட்டின் தலையெழுத்தையே மாற்றியது இந்த பேனா தான் - முதலமைச்சர்!

கண்காட்சியை காண வரும் பார்வையாளர்களை கவரும் விதமாக

  • வெள்ளை மற்றும் சிவப்பு ரோஜாக்கலால் செய்யப்பட்ட யானை, பெங்குயின், மயில்,
  • சிறு தானியங்கலால் உருவாக்கப்பட்ட ஆயி மண்டபம்,
  • பாகற்காய் கொண்டு உருவாக்கப்பட்ட டைனோசர்,
  • சுரைக்காய் கொண்டு அன்னபறவை,
  • அண்ணாச்சி பழம் கொண்டு உருவாக்கப்பட்ட முதலை,
  • திராட்சை பழம் கொண்டு உருவாக்கப்பட்ட மாடு

போன்றவைகள் தத்ரூபமாக உருவாக்கப்பட்டு வைக்கப்பட்டு உள்ளது.

மேலும் படிக்க | சிவகங்கையில் 10 ஆயிரம் மதிப்புள்ள புத்தகங்கள் கிராமபள்ளி மாணவர்களுக்கு வழங்கல்....

இது பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிககளை கவரும் வகையில் உள்ளது. இந்த கண்காட்சி வருகிற ஞாயிற்றுக்கிழமை 12 ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த விழாவில் சபாநாயகர் செல்வம், அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் துறை அதிகாரிகள் பலரும் பங்கேற்றனர்.

மேலும் படிக்க | தமிழ்நாட்டில் வரும் 18 ம் தேதி...5 கோயில்களில் மகாசிவராத்திரி விழா...அமைச்சர் சொன்ன தகவல்!