மகாராஷ்டிராவில் உச்சகட்ட அரசியல் நாடகம்.. எதிர்கட்சி தலைவர் தேவேந்திர ஃபட்னாவிஸ் டெல்லி பயணம்!!

மகாராஷ்டிராவில் உச்சகட்ட அரசியல் நாடகம் அரங்கேறி வரும் நிலையில் எதிர்கட்சி தலைவரும் முன்னாள் முதல்வருமான தேவேந்திர ஃபட்னாவிஸ் டெல்லி சென்றுள்ளார்.

மகாராஷ்டிராவில் உச்சகட்ட அரசியல் நாடகம்.. எதிர்கட்சி தலைவர் தேவேந்திர ஃபட்னாவிஸ் டெல்லி பயணம்!!

மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையில், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஒன்றிணைந்த கூட்டணி ஆட்சி நடக்கிறது.

இதுநாள் வரை பாஜக-வுக்கு ஆதரவு வழங்கி வந்த சிவசேனா காங்கிரசுடன் சேர்ந்து தனித்து ஆட்சியமைத்துள்ளதால் கடும் ஆத்திரத்தில் இருக்கும் பாஜக, சிவசேனா ஆட்சியை கவிழ்க்க சந்தர்ப்பம் பார்த்து வந்தது.

இந்த நிலையில் நேற்று நடந்த மேலவை உறுப்பினர் தேர்தலில் சிவசேனா எம். எல்.ஏ-கள் பாஜகவுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

இது குறித்த சிவசேனா அவசர ஆலோசனை கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில் கூட்டணியில் அங்கம் வகிக்கும் 30க்கும் மேற்பட்ட எம். எல்.ஏ-களை காணவில்லை என கூறப்படுகிறது. இதனால் மகாராஷ்டிராவில் ஆட்சி கவிழக்கூடிய ஆபத்து உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த பரபரப்பான சூழலில் எதிர்கட்சி தலைவரும் முன்னாள் முதல்வருமான தேவேந்திர ஃபட்னாவிஸ் டெல்லி சென்றுள்ளார். அனேகமாக சட்டபேரவையில் ஆளும் சிவசேனா அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரக்கூடும் எனவும் அது குறித்து ஆலோசிக்கவே ஃபட்னாவிஸ் டெல்லி விரைந்துள்ளதகவும் கூறப்படுகிறது.