போலி தடுப்பூசி விவகாரம் - பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில், போலியாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட சம்பவத்தை கண்டித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

போலி தடுப்பூசி விவகாரம் - பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில், போலியாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட சம்பவத்தை கண்டித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கொல்கத்தாவில் சமீபத்தில் நடந்த தடுப்பூசி முகாம் ஒன்றில், கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களில் பலருக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டன. இதுகுறித்து பரிசோதனை செய்தத்தில், கொரோனா தடுப்பூசிகள் போலியானவை என தெரியவந்தது.

கொல்கத்தா மாநகராட்சி பெயரில் நடந்த இந்த மோசடி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், சம்மந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி, பாஜகவினர் இன்று கொல்கத்தாவில், மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த மோசடிக்கு திரிணாமுல் காங்கிரஸின் முக்கிய பிரமுகர்கள் உடந்தை என குற்றம் சாட்டிய பாஜக மாநில தலைவர் திலிப் கோஷ் , மேற்கு வங்கத்தில் சட்டம்-ஒழுங்கு மோசமாக உள்ளதாக சாடினார்.