பிரபல பின்னணி பாடகர் கிருஷ்ணகுமார் மறைவு.. மேற்குவங்க முதலமைச்சர் மலர்வளையம் வைத்து அஞ்சலி

பிரபல பின்னணி பாடகர் கே.கே. என்கிற கிருஷ்ணகுமார் குன்னத்து மறைவுக்கு மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அஞ்சலி செலுத்தினார்.

பிரபல பின்னணி பாடகர் கிருஷ்ணகுமார் மறைவு.. மேற்குவங்க முதலமைச்சர் மலர்வளையம் வைத்து அஞ்சலி

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம், வங்காளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ஏராளமான பாடல்களை பாடி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் கே.கே. என்கிற கிருஷ்ணகுமார் குன்னத்து. டெல்லியை சேர்ந்த இவர், பாப் மற்றும் ராக் இசைப் பாடல்கள் மூலம் 1990களில் பிரபலமானவர். 

இந்தநிலையில் நேற்று கொல்கத்தாவில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் மேடையில் சுமார் ஒரு மணி நேரம் பாடல்களை பாடினார். பின்னர் நிகழ்ச்சி முடிந்து அவர் தங்கியிருந்த ஓட்டலுக்கு திரும்பியபோது, திடீரென மாரடைப்பு  ஏற்பட்டு காலமானார்.

இதைத்தொடர்ந்து  அவரது உடல்,  கொல்கத்தாவில் உள்ள ரபிந்திர சதானில் வைக்கப்பட்டு, அரசு சார்பில் இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பேனர்ஜி  மற்றும் கே.கே. குடும்பத்தினர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து திரைத்துறையினர், ரசிகர்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.