சீனாவை சமாளிக்க சாலை விரிவாக்கம் கோரும் மத்திய அரசு

சீனாவை சமாளிக்க நாட்டின் பாதுகாப்பு கருதி சார் தாம் சாலை விரிவாக்க பணிகளுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளிக்க வேண்டும் என மத்திய அரசு கோரியுள்ளது.

சீனாவை சமாளிக்க சாலை விரிவாக்கம் கோரும் மத்திய அரசு

சீனாவை சமாளிக்க நாட்டின் பாதுகாப்பு கருதி சார் தாம் சாலை விரிவாக்க பணிகளுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளிக்க வேண்டும் என மத்திய அரசு கோரியுள்ளது.

இமயமலையில் உள்ள கங்கோத்ரி, யமுனோத்ரி, கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் ஆகிய நான்கு வழிபாட்டு தளங்களை இணைக்கும் வகையில் மத்திய அரசு சார் தாம் என்ற நெடுஞ்சாலை திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

சாலை விரிவாக்க பணிக்காக வனவிலங்குகள் நிறைந்த பகுதியில் மரங்கள் வெட்டப்படுவதால், நிலச்சரிவு அதிகரிக்க கூடிய ஆபத்து உள்ளதாக கூறி உச்சநீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இது குறித்து விளக்கமளித்துள்ள மத்திய அரசு சீனா எல்லையில், ஹெலிகாப்டர் தளங்களை அமைப்பதாக குறிப்பிட்டு அனுமதி கோரியுள்ளது.