தலைநகரில் முதல் குரங்கம்மை பாதிப்பு...! உறுதி செய்த சுகாதார துறை அமைச்சகம் ..!

டெல்லியில் முதல் குரங்கம்மை பாதிப்பு ஒருவருக்கு கண்டறியப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர் , மௌலானா ஆசாத் மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது.

தலைநகரில் முதல் குரங்கம்மை பாதிப்பு...! உறுதி செய்த சுகாதார துறை அமைச்சகம் ..!

குரங்கம்மை & அதன் அறிகுறிகள்  :  

குரங்கம்மை, விலங்குகளிலிருந்து மனிதனுக்கு பரவும் ஒரு வகை வைரஸ் தொற்று ஆகும். இது முதன் முதலில் காங்கோ நாட்டில் 1970 ம் ஆண்டு கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் தொற்று உண்டாவது மிக அரிதான ஒன்று. இதனால் பாதிக்கப்படுபவர்கள் சில வாரங்களிலேயே குணமடைந்து வீடு திரும்பி விடுவார்கள் என பிரிட்டனின் தேசிய சுகாதார சேவை ஒரு தகவல் கூறி இருக்கிறது. 

     அறிகுறிகள் :
             1. பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல், தலைவலி, முதுகு வலி, தசை வலி, சோர்வு ஏற்படும்.
             2. காய்ச்சலுக்கு பின், தடிப்புகள் ஏற்படும். அதிலும் குறிப்பாக இந்த தடிப்புகள் முகத்தில் உண்டாகும். 
             3. பொதுவாக உள்ளங்கை மற்றும் பாதங்களில் இந்த தடிப்புகள் உண்டாகும். இதனால் தழும்புகளும் ஏற்படும். 

குரங்கம்மை பாதிப்பு : 

இந்தியாவின் முதல் குரங்கம்மை பாதிப்பு கேரளாவில் உள்ள ஒருவருக்கு கடந்த ஜுலை 15 ம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது.இந்த தொற்று பாதிக்கப்பட்டவர், ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளா திரும்பியுள்ளார்.  அதனை தொடர்ந்து, கேரளாவில் மேலும், 2 பேர் குரங்கம்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

குரங்கம்மை பாதிப்பு எண்ணிக்கை : 

இந்நிலையில் தற்போது, டெல்லியில் முதல் குரங்கம்மை பாதிப்பு ஒருவருக்கு கண்டறியப்பட்டுள்ளது. அவர், மௌலானா ஆசாத் மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் நோயாளி 31 வயதானவர் என்றும், பயண வரலாறு எதுவும் இல்லாமல் காய்ச்சல் மற்றும் தோல் புண்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்றும் தெரிவித்துள்ளது. 

இந்தியாவில் குரங்கம்மை பாதிப்பு எண்ணிக்கை :

முன்னதாக கேரளாவில் 3 பேர் குரங்கம்மையால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது டெல்லியில் ஒருவர் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே இந்தியாவில் குரங்கம்மை பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது.