வாகா எல்லையில் கொடி இறக்க நிகழ்ச்சி...கண்கவர் கலைநிகழ்ச்சிகள்...

அட்டாரி-வாகா எல்லையில் கோலாகலமாக நடைபெற்ற தேசிய கொடி இறக்கும் நிகழ்ச்சியை, ஏராளமான மக்கள் கண்டு ரசித்தனர்.

வாகா எல்லையில் கொடி இறக்க நிகழ்ச்சி...கண்கவர் கலைநிகழ்ச்சிகள்...

பஞ்சாப் மாநிலம் அட்டாரி-வாகா எல்லை பகுதியில் சுதந்திர தின கொண்டாட்டங்கள் களைகட்டின. இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் தேசிய கொடி இறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

சுதந்திர தினத்தையொட்டி காலையில் கொடி ஏற்றப்பட்டு, மாலையில் கொடி இறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இரு நாட்டு வீரர்களும் வழக்கமான நடைமுறைகளை மேற்கொண்டு, வாகா கேட்டை திறந்து இரு நாட்டு தேசிய கொடிகளை கீழே இறக்கினர்.  

முன்னதாக வீரத்தை பறைசாற்றும் வகையில் இரு நாட்டு பாதுகாப்பு படை வீரர்களும் மீசையை முறுக்கி கொண்டு, மிடுக்கான நடையை வெளிப்படுத்தினர். உணர்ச்சி பெருக்கான இந்த நிகழ்வை, ஏராளமான மக்கள் கண்டு ரசித்தனர்.