இந்தியாவில் முதல் முறையாக ராணுவத்திற்கான சிறப்பாக கட்டப்பட்ட வீடுகள்..அப்படி என்ன சிறப்புகள்?!!

அகமதாபாத் கான்ட் பகுதியில் ராணுவத்தின் முதல் 3டி அச்சிடப்பட்ட வீட்டை தயார் செய்துள்ளது இந்திய ராணுவம்.

இந்தியாவில் முதல் முறையாக ராணுவத்திற்கான சிறப்பாக கட்டப்பட்ட வீடுகள்..அப்படி என்ன சிறப்புகள்?!!

இந்திய ராணுவம் தனது வீரர்களுக்காக முதல் 3டி அச்சிடப்பட்ட வீட்டைக் கட்டியுள்ளது. அகமதாபாத் கான்ட் பகுதியில் கட்டப்பட்ட இந்த குடியிருப்பு நேற்று திறக்கப்பட்டுள்ளது.

இந்த ஒற்றை மாடி வீட்டில் 3டி அச்சிடப்பட்ட தரை மற்றும்  பேரிடர்-எதிர்ப்பு, நிலநடுக்க விதிகள் மற்றும் பசுமை கட்டிடத்தின் தரம் ஆகியவை இணைத்து கட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்திய ராணுவ வீரர்களுக்கான முதல் 3டி அச்சிடப்பட்ட இருப்பிடம் இதுவாகும்.

இந்த நுட்பத்தில் 3டி பிரிண்டர்கள் பயன்படுத்தப்படுவதாக ராணுவம்  தெரிவித்துள்ளது.  இது கணினிமயமாக்கப்பட்ட முப்பரிமாண வடிவமைப்பை அடிப்படையாகக் கொண்டது எனவும் கூறப்பட்டுள்ளது. 

இந்த ஒற்றை மாடி வீடு  MICOB பிரைவேட் லிமிடெட் உடன் இணைந்து தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  இது சமீபத்திய 3டியின் கட்டுமான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியுள்ளது எனவும் இந்த 3டி அச்சிடப்பட்ட வீடுகள், ராணுவ வீரர்களுக்கான வளர்ந்து வரும் வீட்டுத் தேவையை விரைவாக பூர்த்தி செய்யும் எனவும் கூறியுள்ளது.  

இது நவீன காலத்தில் விரைவான கட்டுமானத்தின் சின்னமாக இருப்பதுடன் இந்த கட்டுமானமானது 'ஆத்மநிர்பர் பாரத் அபியான்'க்கு ஊக்கமளிக்கும் வகையில் இராணுவத்தின் அர்ப்பணிப்புக்கான சான்றாகவும் உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

-நப்பசலையார்

இதையும் படிக்க:   முகமற்ற முகமூடியா கார்கே...காங்கிரஸ் கூறுவதென்ன?!!!