ராணுவத்தில் முதல்முறையாக குறுகிய கால ராணுவ வீரர்கள்.. மொத்தம் 46 ஆயிரம் வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்!!

இந்திய ராணுவத்தில் முதல்முறையாக குறுகிய கால ராணுவ வீரர்களை தேர்வு செய்யும் முறை குறித்த அறிவிப்பை, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டுள்ளார்.

ராணுவத்தில் முதல்முறையாக குறுகிய கால ராணுவ வீரர்கள்.. மொத்தம் 46 ஆயிரம் வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்!!

இந்தியாவில் முப்படைகளிலும், குறுகிய கால ராணுவ வீரர்களை தேர்வு செய்யும் வகையில், ‘அக்னி பாத்’ எனும் திட்டத்தை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று அறிமுகப்படுத்தினார்.

டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இது குறித்த அறிவிப்பை அவர் வெளியிட்டார். இதன்மூலம் நாட்டின் முப்படைகளின் ராணுவ சேவையில், வீரர்கள் 4 ஆண்டுகள் வரை பணி செய்யும் வகையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

அடுத்த 90 நாட்களில் இத்திட்டத்தின் கீழ் வீரர்கள் தேர்வு நடைபெற உள்ளதாகவும், மொத்தம் 46 ஆயிரம் வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்னி வீரர்கள் என அழைக்கப்படும் இவர்கள் 4 ஆண்டு கால பணிக்கு பிறகு ஓய்வு பெறுவார்கள் எனவும், ஓய்வூதிய பலன்களும் அவர்களுக்கு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதினேழரை வயதில் இருந்து 21 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீரர்களுக்கு கவர்ச்சிகர மாத சம்பளம் வழங்கப்படும் என்றும், இதன் மூலம் வீரர்களுக்கு செலவிடப்படும் செலவினங்கள் குறைக்கப்பட்டு, முப்படை ராணுவத்தை நவீனப்படுத்துவதற்கு அத்தொகை செலவிடப்பட உள்ளதாகவும், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.