காங்கிரசில் இருந்து விலகிய முன்னாள் முதல்வர்...  பா.ஜ.க.வில் இணைகிறாரா..?

கோவாவின் முன்னாள் முதலமைச்சரான ரவி நாயக், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார். எம்.எல்.ஏ., பதவியையும் அவர் ராஜினாமா செய்ததால், மாநில காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. 

காங்கிரசில் இருந்து விலகிய முன்னாள் முதல்வர்...  பா.ஜ.க.வில் இணைகிறாரா..?

கோவாவில் அடுத்தாண்டு துவக்கத்தில் சட்டசபைக்கு தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் காங்கிரஸ் 17ல் வென்றது. ஆனால் 13 தொகுதிகளில் வென்ற பா.ஜ.க, மற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடித்தது.

அதைத் தொடர்ந்து காங்கிரசில் இருந்து பல எம்.எல்.ஏ.,க்கள் விலகினர். அதில் பெரும்பாலானோர் பா.ஜ.க,வில் இணைந்தனர். முன்னாள் முதலமைச்சரான லுாய்ஜின்ஹோ பலோரோ சமீபத்தில் காங்கிரசில் இருந்து விலகி திரிணமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

இந்த நிலையில், மற்றொரு முன்னாள் முதலமைச்சரான ரவி நாயக்கும் நேற்று கட்சியில் இருந்து விலகினார். தன் எம்.எல்.ஏ., பதவியையும் அவர் ராஜினாமா செய்தார். அவரது இரண்டு மகன்கள் சமீபத்தில் பா.ஜ.க,வில் இணைந்தனர். அதனால் இவரும் பா.ஜ.க,வில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ரவி நாயக் ராஜினாமாவைத் தொடர்ந்து, சட்டசபையில் காங்கிரஸ் கட்சியின் பலம் மூன்றாகக் குறைந்துள்ளது.