உலகம்  முழுவதும் முகநூல், வாட்ஸப், இன்ஸ்டாகிராம் முடக்கம்… திக்குமுக்காடி போன பயனாளிகள்…  

உலகம்  முழுவதும் முகநூல், வாட்ஸப், இன்ஸ்டாகிராம் போன்ற இணையதள சேவைகள் நேற்று இரவு 8 மணி முதல் முடங்கியதால் பயனாளிகள் திக்குமுக்காடி போயினர்.

உலகம்  முழுவதும் முகநூல், வாட்ஸப்,  இன்ஸ்டாகிராம் முடக்கம்… திக்குமுக்காடி போன பயனாளிகள்…   

விரல் நுனியில் உலகம் என்பதை மெய்பித்து கொண்டு இருக்கும் இணையங்களான பேஸ்புக், வாட்ஸ் அப்,  இன்ஸ்டா கிராம் சேவைகள் திடீர் என முடங்கியதால் அதனை பயன்படுத்தும் அனைவரும் செய்வதறியாது திகைத்து போயினர். தொழில்நுட்ப கோளாறால் முகநூல், வாட்ஸ் அப் போன்ற இணையதள சேவைகள் முடங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. திடீர் முடக்கத்தால் இந்தியா மட்டுமின்றி, கனடா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் பயனாளிகள் அவதிக்குள்ளாயினர்.

சமூக ஊடக நிறுவனமான வாட்ஸ்அப் 14,000 க்கும் மேற்பட்ட பயனர்களுக்கு செயலிழந்துள்ளதாகவும், மெசஞ்சர் கிட்டத்தட்ட 3,000 பயனர்களுக்கு செயலிழந் துள்ளதாகவும் Downdetector தளம் தெரிவித்து இருந்தது. பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் சிக்கல்களை எதிர்கொண்டிருப்பதாக 20,000 க்கும் மேற்பட்டோர்  டுவிட்டரில் புகார் அளித்தனர். ஆனால் செயலிழப்பு குறித்து பேஸ்புக் கருத்து தெரிவிக்கவில்லை.  மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டுவர நாங்கள் பணியாற்றி வருகிறோம் என்றும் வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்து இருந்தது. அதன்படி நீண்ட போராட்டத்துக்கு பின்னர் அதிகாலை 4 மணி அளவில் மீண்டும் பேஸ்புக் இன்ஸ்டாகிராம் , வாட்ஸ் அப் ஆகிய தளங்கள் இயங்க தொடங்கின.