3வது அலையால் குழந்தைகளுக்கு அதிக பாதிப்பு..?  மத்திய உள்துறை அமைச்சக குழு எச்சரிக்கை...

இந்தியாவில் கொரோனா தொற்றின் 3வது அலை, அக்டோபர் மாதத்தில் உச்சத்தை அடைய கூடும் என மத்திய உள்துறை அமைச்சக குழு எச்சரித்துள்ளது. 

3வது அலையால் குழந்தைகளுக்கு அதிக பாதிப்பு..?  மத்திய உள்துறை அமைச்சக குழு எச்சரிக்கை...

இந்தியாவில் பேரிழப்பை ஏற்படுத்திய கொரோனா 2 ஆம் அலையின் தாக்கம் தற்போது கட்டுக்குள் வந்துள்ளது. இதையடுத்து 3 ஆம் அலை ஏற்பட கூடும் எனவும் இது 2 ஆம் அலையை காட்டிலும் சற்று குறைவான பாதிப்பையே ஏற்படுத்தும் என்றும் கூறப்பட்டது. இது குழந்தைகளை தாக்க வாய்ப்புள்ளதாகவும் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்து வந்தனர். இது குறித்த ஆய்வுகளை மத்திய நிபுணர் குழு மேற்கொண்டு வந்தது. 

இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா 3 ஆம் அலை அக்டோபர் மாதத்தில் உச்சத்தை அடைய கூடும் என மத்திய அரசுக்கு நிபுணர் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. 3வது அலையில், குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவர் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதனால் மருத்துவமனைகளில் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்வது, முந்தைய அலையில் பாடம் கற்றுக் கொண்டதன் படி, வெண்டிலேட்டர்கள், மருத்துவமனையில் அதிகப்படியான படுக்கை வசதிகள், ஆக்சிஜன், ஆம்புலன்ஸ்கள் போன்ற முன்னேற்பாடுகளில் மத்திய அரசு தீவிரம் காட்ட வேண்டும் என நிபுணர் குழு எச்சரித்துள்ளது. 

இணை நோய் உள்ள குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை விரைவுப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே 3 ஆம் அலையை சமாளிக்க கூடிய யுக்திகளை ஆராயும் முயற்சியில் மத்திய நிபுணர் குழு ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.