கடைசி நேரத்தில் அறிக்கை தாக்கல் செய்தால் எப்படி வாசிக்க முடியும்?- உ.பி அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

லக்கிம்பூர் கேரி வன்முறை தொடர்பாக யோகி ஆதித்யநாத் அரசு கடைசி நிமிடத்தில் தாக்கல் செய்யும் அறிக்கையை தாங்கள் எப்படி வாசிக்க முடியும் என  உச்சநீதிமன்றம் சாடியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் நடைபெற்ற வன்முறையில், 4 விவசாயிகள் உள்பட 8 பேர் கொல்லப்பட்டனர். இதுதொடர்பாக உச்சநீதிமன்றம் தாமாக வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறது. கடந்த 8ம் தேதி நடந்த விசாரணையின் போது, வழக்கில் யாரையும்  கைது செய்யாததற்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவிக்கவே, அதிரடியாக மத்திய அமைச்சரின் மகன் கைது செய்யப்பட்டார். இந்தநிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, வன்முறை தொடர்பான அறிக்கையை அரசு  கடைசி நிமிடத்தில் சமர்பித்ததாக தெரிகிறது. இதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், அறிக்கைக்காக நள்ளிரவு 1 மணி வரை காத்திருந்ததாக கூறினார். கடைசி நிமிடத்தில் தாக்கல் செய்யும் அறிக்கையை தாக்கல் எப்படி வாசிக்க முடியும் என கேள்வி எழுப்பியதோடு, கூடுதல் சாட்சியங்களிடம் விசாரணை நடத்தாதது ஏன்? எனவும் கேள்வி எழுப்பினர்.