இந்தியாவில் சதமடித்த ஒமிக்ரான் தொற்று... முதலிடத்தை பிடித்த மகாராஷ்டிரா...

இந்தியாவில் 11 மாநிலங்களில் இதுவரை 101 பேருக்கு கொரோனா தொற்றின் புதிய மாறுபாடான ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் சதமடித்த ஒமிக்ரான் தொற்று... முதலிடத்தை பிடித்த மகாராஷ்டிரா...

கொரோனா தொற்றின் புதிய மாறுபாடான ஒமிக்ரான் உலக நாடுகள் பலவற்றுக்கும் பரவி வேகமெடுத்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவிலும் ஒமிக்ரான் வேகமெடுக்க தொடங்கியுள்ளது. இந்தியாவில் ஒமிக்ரான் பாதித்தவர்களின் எண்ணிக்கை 101ஆக அதிகரித்துள்ளது.

இந்த நோய்த்தொற்று இதுவரை 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து பதிவாகியுள்ளது என்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் 101 பேருக்கு ஒமிக்ரான் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.  

இதில் மிக அதிகமாக மகாராஷ்டிராவில் 32 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 22 பாதிப்புகளுடன் டெல்லி இரண்டாவது இடத்தில் உள்ளது. கேரளாவில்  5 பேர்,  குஜராத்தில் 5 பேர்,  ராஜாஸ்தானில் 17 பேர்,  கர்நாடகாவில் 8 பேர், தமிழ்நாடு, ஆந்திரா, மேற்குவங்காம், சண்டிகர் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர்  ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.