மணிப்பூர் சென்றடைந்த I.N.D.I.A கூட்டணி..! கலவரம் நடைபெற்ற இடங்களில் ஆய்வு...!

மணிப்பூர் சென்றடைந்த I.N.D.I.A கூட்டணி..!  கலவரம் நடைபெற்ற இடங்களில் ஆய்வு...!

மணிப்பூர் சென்றடைந்த I.N.D.I.A கூட்டணிக் கட்சிகளின் எம்.பிக்கள் குழுவினர் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து  குறைகளை கேட்டறிந்து வருகின்றனர்.

மணிப்பூரில் மெய்த்தி மற்றும் குக்கி இனக் குழுக்களுக்கிடையே  கடந்த மேதம் நிகழ்ந்த மோதலில் இருநூறுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் தங்கள் வாழ்விடங்களை விட்டு சென்று அகதிகளாக வாழும் நிலை ஏற்பட்டுள்ளது. எனினும் தற்போது வரை மோதல்கள் நீடித்து வரும் நிலையில், கலவரத்தின் போது குக்கி இனப் பெண்கள் நிர்வான நிலையில் அழைத்துச் செல்லப்பட்ட வீடியோ வெளியாகி நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக  பிரதமர் மோடி விளக்கம் தரக் கோரி நாடாளுமன்ற இரு அவைகளையும் எதிர்கட்சிகள் முடக்கி உள்ளனர்.

இந்த நிலையில் ஏற்கனவே அறிவித்தபடி மணிப்பூரின் நிலைமையை ஆய்வு செய்ய இந்தியா கூட்டணி எம் பிக்கள் குழுவினர் மணிப்பூர் சென்றடைந்தனர். இரண்டு நாள் பயணமாக  காங்கிரஸ் எம்பி ஆதிர் ரஞ்சன் தலைமையில் இம்பால் சென்ற எதிர்கட்சி எம்பிக்கள் முதல்கட்டமாக நிவாரண முகாம்களின் தங்க வைக்கப்பட்டுள்ள பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்தனர்.

மணிப்பூர் தலைநகர் இம்பால் சென்றடைந்தது

சுரச்சந்த்பூர் மாவட்டத்தில் உள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களை பார்வையிட்டு அவர்களிடம் கலந்துரையாடினர். அவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகளையும் கொடுத்து  எம்பிக்கள் ஆறுதால் தெரிவித்தனர்.

இதையும் படிக்க    |  மணிப்பூர் அமைதி திரும்ப ஆளுநரை சந்திக்கிறார் கனிமொழி!