எதிரி நாட்டு நீர்மூழ்கிக் கப்பல்களை கண்டறியும் ஐஎன்எஸ் துருவ் நீர் மூழ்கிக் கப்பல் 10ம் தேதி இணைப்பு...

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் மற்றும் எதிரி நாட்டு நீர்மூழ்கிக் கப்பல்களை கண்டறியும் ஐஎன்எஸ் துருவ் நீர் மூழ்கிக் கப்பல் வரும் 10ம் தேதி இந்தியக் கடற்படையில் இணைக்கப்பட உள்ளது

எதிரி நாட்டு நீர்மூழ்கிக் கப்பல்களை கண்டறியும் ஐஎன்எஸ் துருவ் நீர் மூழ்கிக் கப்பல்  10ம் தேதி இணைப்பு...

இந்தியாவின் ஹிந்துஸ்தான் கப்பல் கட்டும் நிறுவனம், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சிக் கழகம் ஆகிய அமைப்புகள் சேர்ந்து ஐஎன்எஸ் துருவ் கப்பலை வடிவமைத்துள்ளன. இந்திய நகரங்கள் மற்றும் ராணுவ நிலைகளை குறிவைத்து ஏவப்படும் ஏவுகணைகளை இந்தக் கப்பலில் உள்ள  ரேடார்கள் உதவியுடன் அடையாளம் காண்பதுடன், அலைக்கற்றை உணர் கருவிகள் மூலம் எதிரிநாடுகளின் உளவு செயற்கைகோள்களையும் கண்டறிய முடியும். 

மேலும் எதிரிநாடுகள் தங்களது ஏவுகணைகளை சோதனை செய்யும் போதே அவற்றின் திறனையும் துருவ் கப்பல்கள் மூலம் கண்டறிய முடியும். 10 ஆயிரம் டன் எடை கொண்ட இந்தக் கப்பலின் மூலம் ஏடன் வளைகுடாவில் இருந்து தென்சீனக் கடல் பகுதி வரை இந்தியக் கடற்படையால் கண்காணிக்க முடியும் என தகவல்கள் வெளியாகியுள்ளன
.  
இத்தகைய கப்பல்கள் அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா, சீனா, பிரான்சு ஆகிய நாடுகளிடம் மட்டுமே உள்ள நிலையில் தற்போது இந்தியாவும் இந்தக் கப்பலை வெற்றிகரமாகத் தயாரித்து உள்ளது.இந்தக் கப்பல்களில் உள்ள ரேடார்கள் கடல்படுகைகளை துல்லியமாக வரைவதால், எதிரிநாடுகளின் கப்பல்களின் நிலையை சரியாக அடையாளம் கண்டு பதில் தாக்குதலை நிகழ்த்தலாம். செப்டம்பர் 10ம் தேதி ஐஎன்எஸ் துருவ் இந்தியக் கடற்படையில் இணைக்கப்பட உள்ளது.