உரிய ஆவணங்கள் இல்லாமல் வெளிநாட்டில் வேலை செய்தால்...என்ன ஆகும் தெரியுமா?

உரிய ஆவணங்கள் இல்லாமல் வெளிநாட்டில் வேலை செய்தால்...என்ன ஆகும் தெரியுமா?

உரிய ஆவணங்கள் இல்லாமல் வெளிநாட்டில் வேலை செய்தால், இந்திய தூதரகத்தால் கூட உடனடியாக உதவ முடியாது என வெளியுறவு துறை அமைச்சக அதிகாரி வெங்கடாசலம் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பான குடியேற்றத்தை வலியுறுத்தி, சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில், விழிப்புணர்வு நடை பயணம் நடைபெற்றது. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நடைபயணத்தில் சிறப்பு விருந்தினராக சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பங்கேற்று நடைபயணத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பின்னர், செய்தியாளரிடம் பேசிய வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரியும் புலம்பெயர் பாதுகாவலருமான வெங்கடாசலம்,போலி முகவர்கள் மூலம் வெளிநாடு செல்பவர்களுக்கு ஏதாவது சிக்கல் ஏற்பட்டால், இந்திய தூதரகத்தின் மூலமாக எந்த ஒரு உதவியும் வழங்க முடியாது என எச்சரித்த அவர், உரிய ஆவணங்கள் இல்லாமல் வெளிநாட்டில் வேலை செய்தால், இந்திய தூதரகத்தால் கூட உடனடியாக உதவ முடியாது எனவும் போலியான முகவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தார்.