பொதுமக்களுக்கு கொடுக்கும் பொருளில் மோடி படம், தாமரை சின்னம் இடம்பெற வேண்டும்..! பாஜக மேலிடம் உத்தரவு.! 

பொதுமக்களுக்கு கொடுக்கும் பொருளில் மோடி படம், தாமரை சின்னம் இடம்பெற வேண்டும்..! பாஜக மேலிடம் உத்தரவு.! 

ஒன்றிய அரசின் பிரதான் மந்திரி கரிப் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் விநியோகிக்கப்படும் பொருட்களில் பிரதமர் மோடி மற்றும் தாமரை சின்னம் கண்டிப்பாக இடம் பெற வேண்டும் என பாஜக ஆளும் மாநிலங்களுக்கு மேலிடம் உத்தரவிட்டுள்ளது. 

கொரோனா வைரஸின் இரண்டாவது அலையின் தாக்கத்தை கருத்தில் கொண்டு, ஒன்றிய அரசு மீண்டும் ஏழை குடும்பங்களுக்கு பிரதான் மந்திரி கரிப் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் ஒரு நபருக்கு 5 கிலோ கூடுதல் உணவு தானியங்களை இலவசமாக வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது. இப்போது இந்த திட்டத்தை தீபாவளி வரை ஒன்றிய அரசு நீட்டித்துள்ளது.  

இந்நிலையில் பிரதான் மந்திரி கரிப் கல்யாண்யோஜனா திட்டத்தின் கீழ் இலவச ரேஷன் பொருள்கள் விநியோகிக்கப்படும் மையங்களில் பிரதமர் மோடி, மாநில முதல்வர் மற்றும் பாஜகவின் தாமரை சின்னத்துடன் கூடிய பதாகைகளை வைக்க வேண்டும் என்றும் இலவச பொருள்கள் வழங்கப்பட கூடிய பையில் பிரதமர் மோடியின் படம் மற்றும் தாமரை சின்னம் இடம்பெற வேண்டும் என பாஜக ஆளும் மாநிலங்களுக்கு மேலிடம் உத்தரவிட்டுள்ளது.