”குஜராத்தின் செயலால் இந்தியா வெட்கி தலைகுனிகிறது” பாஜக மூத்த தலைவர்...!!!என்ன செய்தது குஜராத்!!!

”குஜராத்தின் செயலால் இந்தியா வெட்கி தலைகுனிகிறது” பாஜக மூத்த தலைவர்...!!!என்ன செய்தது குஜராத்!!!

பில்கிஸ் பானோ வழக்கில் பாஜக மவுனம் காத்து வரும் நிலையில், கற்பழிப்பு மற்றும் கொலைக் குற்றவாளிகளை விடுவிக்க குஜராத் அரசு அனுமதித்ததற்காக பாஜக கட்சியின் மூத்த தலைவரும், இமாச்சல பிரதேச முன்னாள் முதலமைச்சருமான சாந்த குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

“குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டதைக் கேள்விப்பட்டவுடன் வெட்கித் தலை குனிந்தேன். இது வரலாற்றில் மிகவும் காட்டுமிராண்டித்தனமான வழக்குகளில் ஒன்றாகும். எந்த அரசாங்கமும் குற்றவாளிகளுக்கு இத்தகைய விடுதலையை எப்படி அனுமதிக்க முடியும்? குஜராத் அரசு தனது முடிவை திரும்பப் பெற வேண்டும் மற்றும் வழக்கில் தண்டனை பெற்றவர்களை தூக்கிலிட வேண்டும்,” என்றும் வாஜ்பாய் அரசாங்கத்தின் முன்னாள் மத்திய அமைச்சர் கூறியுள்ளார்.
 
இந்த குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட விடுதலையை குறித்து பரிசீலிக்க பிரதமர் நரேந்திர மோடியை அணுகுவேன் என்றும் குமார் கூறியுள்ளார்.

சுதந்திர தினத்தன்று, குஜராத்தில் பூபேந்திர படேல் தலைமையிலான பாஜக அரசாங்கம் அதன் நிவாரணக் கொள்கையின் கீழ் விடுவிக்க அனுமதித்ததை அடுத்து, உயர்மட்ட வழக்கின் 11 குற்றவாளிகளும் கோத்ரா சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டனர்.

இந்தக் குற்றவாளிகளுக்கு 2002 ஆம் ஆண்டு குஜராத் வகுப்புக் கலவரத்தின் போது பில்கிஸ் பானோவைக் கூட்டுப் பலாத்காரம் செய்ததற்காகவும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த பலரைக் கொன்றதற்காகவும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. 

நாடு சுதந்திரத்தின் 75 வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் போது இந்த விடுதலையானது "வெட்கக்கேடானது" என்றும் குமார் விமர்சித்துள்ளார்.

"சிறப்பு நீதிமன்றம் அவர்களின் குற்றத்திற்காக ஆயுள்தண்டனை என்று தீர்ப்பளித்ததை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது எனவும் அவர்களது குற்றங்கள்  நிரூபிக்கப்பட்டுள்ளது எனவும் சாந்த குமார் கூறியுள்ளார்.

"இத்தகைய கொடூரமான குற்றங்கள் இருந்தபோதிலும், அவர்கள் தூக்கிலிடப்படவில்லை என்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. இப்போது, ​​குஜராத் அரசு ஒரு சிறப்பு ஒதுக்கீட்டைப் பயன்படுத்தி அவர்களை விடுவித்துள்ளது என்பதை அறிந்த பிறகு நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன். சுதந்திரம் அடைந்து 75வது ஆண்டாக இருந்தாலும், பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவது வெட்கக்கேடானது”  எனவும் சாந்த குமார் பேசியுள்ளார்.

ஆகஸ்ட் 17 அன்று விஸ்வ ஹிந்து பரிஷத் அலுவலகத்தில் குற்றவாளிகளை மாலை அணிவித்து வரவேற்றதை அடுத்து பெரும் சர்ச்சை வெடித்தது . பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர தின உரையில் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது குறித்து "வெற்றுக் கூற்றுக்களை" கூறியதாக எதிர்க்கட்சியான காங்கிரஸ் குற்றம் சாட்டியது. இன்றளவும் இவ்வழக்கை குறித்து பாஜக மவுனம் காத்து வருகிறது.

இதையும் படிக்க:  பூமியை விழுங்க தயாராகிறதா சூரியன்....ஆய்வு கூறுவது என்ன!!!