19, 300 அடி உயரத்தில் சாலை அமைத்து இந்தியா உலக சாதனை!

லடாக்கில் உலகின் மிக உயரிய சாலையை அமைத்து, பொலிவியாவின் உலக சாதனையை இந்தியா முறியடித்துள்ளது.

19, 300 அடி உயரத்தில் சாலை அமைத்து இந்தியா உலக சாதனை!

லடாக்கில் உலகின் மிக உயரிய சாலையை அமைத்து, பொலிவியாவின் உலக சாதனையை இந்தியா முறியடித்துள்ளது.

இந்திய எல்லை பகுதியான கிழக்கு லடாக்கின் உம்லிங்க்லா பாஸில் சுமார் 19 ஆயிரத்து 300 அடி உயரத்தில் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இது சமூக- பொருளாதார நல்லிணக்கத்துக்கு வழிவகுக்கும் எனவும், எவரஸ்ட் சிகரத்தில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களை காட்டிலும் மிக உயரத்தில் இந்த சாலை அமைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 18 ஆயிரத்து 953 அடி உயரத்திற்கு சாலை அமைத்து பொலிவியா உலக சாதனை படைத்திருந்த நிலையில், தற்போது அதனை இந்தியா முறியடித்துள்ளது.