இந்திய தம்பதியிடம் 45 கைத்துப்பாக்கிகள்...! பறிமுதல் செய்து விசாரணை நடத்தும் சுங்கத்துறை அதிகாரிகள்...

டெல்லி சுங்கத்துறை அதிகாரிகள், இந்திய தம்பதியிடம் இருந்து 22 லட்ச ரூபாய் மதிப்புள்ள 45 கைத்துப்பாக்கிகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்திய தம்பதியிடம் 45 கைத்துப்பாக்கிகள்...! பறிமுதல் செய்து விசாரணை நடத்தும் சுங்கத்துறை அதிகாரிகள்...

ஒரு தம்பதியினர் வியட்நாமின் ஹோ சி மின் நகரில் இருந்து டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்திற்கு வந்துள்ளனர். அப்போது சந்தேகத்திற்கிடமான நபர்களை சோதனை செய்தனர். அப்போது அந்த தம்பதியர், வருகை அறையின் கிரீன் சேனலைக் கடந்து விமான நிலையத்தின் வெளியேறும் வாயிலை நோக்கி வந்தபோது சுங்க அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 45 கைத்துப்பாக்கிகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.அதன் மதிப்பு 22 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயாகும்.  பின்னர் விசாரணை நடத்தியதில், அவர்கள் ஹரியானா மாநிலம் குருகிராம் பகுதியை சேர்ந்த ஜக்ஜித் சிங் மற்றும் ஜஸ்விந்தர் கௌர் என்பது தெரியவந்தது.   

வியட்நாமில் இருந்து, இந்த தம்பதிகள் வந்த அதே நாள்,அதே நேரத்தில் பாரிஸிலிருந்து வந்த ஒரு விமானத்தில், ஜக்ஜித் சிங் - ன் மூத்த சகோதரர் மஞ்சித் சிங் அவர்களிடம் ஒப்படைத்த இரண்டு பெட்டிகளை ஜக்ஜித் சிங் கொண்டுவந்துள்ளார். அவர்களிடம் அந்த பெட்டிகளை ஒப்படைத்த பின்னர், மஞ்சித் விமான நிலையத்தை விட்டு வெளியேறி உள்ளார். இந்த குற்ற செயலில் ஜஸ்விந்தர், ஜக்ஜித்துக்கு உதவி, இந்த திட்டத்தின் ஒரு பகுதியாகவும் இருந்துள்ளார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் ஜக்ஜித் சிங் மற்றும் ஜஸ்விந்தர் கவுர் ஆகியோர் சுங்கச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.