விண்ணில் ஏவப்பட்ட இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்!!!

விண்ணில் ஏவப்பட்ட இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்!!!

இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்டான விக்ரம் எஸ்-ஐ இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.

தெலங்கானாவின் ஐதராபாத்தைச் சேர்ந்த ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் என்ற நிறுவனம், விக்ரம் - எஸ் என்ற ராக்கெட்டை தயாரித்தது.  இது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் தனியார் ராக்கெட் என்பது குறிப்பிடத்தக்கது.  83 கிலோ எடையை தூக்கிச் செல்லும் இந்த ராக்கெட், இரு இந்திய செயற்கைக்கோள்கள், ஒரு வெளிநாட்டு செயற்கைக்கோள் என 3 செயற்கைக்கோள்களை சுமக்கவல்லது. 

545 கிலோ எடை கொண்ட இந்த ராக்கெட், 6 மீட்டர் உயரமும் 7 டன் உந்து சக்தியையும் கொண்டது.  பூமியில் இருந்து தகவல்களை திரட்டுவதற்கு இந்த ராக்கெட் பயன்படுத்தப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.  ஒட்டுமொத்தமாக இந்தப் பணிக்கு பிரரம்ப் என பெயரிடப்பட்டது.  இந்நிலையில் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து, விக்ரம் எஸ் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இதனை உறுதிபடுத்தியுள்ள இன்ஸ்பேஸ் தலைவர் பவன் கோயன்கா, இது ஒரு வரலாற்றுச்சிறப்புமிக்க நிகழ்வு என புகழாரம் சூட்டியுள்ளார்.

இதையும் படிக்க:   முதலமைச்சருக்கு சவால் விட்ட ஆளுநர்...அப்படி என்ன சவால்?