இந்தோ திபெத்தியன் எல்லை காவல்துறையினர் பலி!!!!

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சிவிலியன் பேருந்து கவிழ்ந்ததில் 6 இந்தோ திபெத்தியன் எல்லை காவல்துறையினர் பலி.

இந்தோ திபெத்தியன் எல்லை காவல்துறையினர் பலி!!!!

அமர்நாத் பாதுகாப்பு பணிக்காக சென்ற பேருந்து கவிழ்ந்ததில் 6 பேர் பலியாயினர் மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர் எனவும் காயமடைந்த வீரர்கள் விமானம் மூலம் மீட்கப்பட்டு ஸ்ரீநகரில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தோ திபெத்தியன் எல்லை காவல்துறையை சேர்ந்த 37 காவலர்களும் ஜம்மு காஷ்மீரின் 2 காவலர்களும் சிவிலியன் பேருந்தில் சந்தன்வாரியிலிருந்து பஹல்காம் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோடு வாகனத்தில் கோளாறு ஏற்பட்டதால் ஆற்றில் கவிழ்ந்ததாக எல்லை காவல்படையின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அமர்நாத் யாத்திரை பணிக்காக அவர்கள் அனுப்பப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.  மேலும் தொடர்ந்து உள்ளூர் நிர்வாகத்துடன் தொடர்பில் இருப்பதாகவும் மீட்பு பணிகள் தொடர்ந்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மத்திய ரிசர்வ் காவலர் படையானது ராணுவம் மற்றும் உள்ளூர் காவல்துறையினருடன் இணைந்து பலத்த பாதுகாப்புகளுடன் அமர்நாத் யாத்திரைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் மூலம் தெரிய வருகிறது.

அமர்நாத் புனித யாத்திரையானது இமயமலையில் 3800 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.

இதையும் படிக்க: ”காங்கிரஸ் வெற்றிக்காக கருப்பு மேஜிக் செய்கிறது”- பிரதமர் விமர்சனம்