ஆந்திரா: 115 மண்டலங்களில் கடுமையான வெப்பச்சலனம்...மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் கணிப்பு!

ஆந்திரா: 115 மண்டலங்களில் கடுமையான வெப்பச்சலனம்...மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் கணிப்பு!

ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் 12 மண்டலங்களில் கடுமையான வெப்பச் சலனம் நிலவும் நிலையில், 115 மண்டலங்கள் இன்று வெப்பச்சலனத்தை எதிர்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஏற்கனவே கணிக்கப்பட்டுள்ளது படி, 12 மண்டலங்களில் கடுமையான வெப்பச் சலனம் நிலவி வருகிறது. அதன்படி, வெப்ப சலனம் நிலவி வரும் 7 மண்டலங்கள் பார்வதிபுரம் மன்யம் மாவட்டத்திலும், 4 மண்டலங்கள் அனகாப்பள்ளியிலும், ஒன்று காக்கிநாடாவிலும் உள்ளன.

இதையும் படிக்க : மத்திய ஆயுதப்படை காவலர்களுக்கான தேர்வுகளை 13 மொழிகளில் நடத்த முடிவு...!

இந்நிலையில் இன்று 115 மண்டலங்கள் வெப்பச்சலனத்தை எதிர்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மாநிலத்தில் அல்லூரி சீதாராம ராஜு, கோனசீமா, கிழக்கு கோதாவரி, குண்டூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களின் 115 மண்டலங்களில் வெப்ப அலையும் இருக்கும் என மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் கணித்துள்ளது. வெயில் காலநிலை குறித்து மக்கள் எச்சரிக்கையாக இருக்கவும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.