பாஜகவின் கீழ் செயல்படுகிறதா இந்தியாவின் துணை ராணுவம் ....ராஜஸ்தான் முதலமைச்சர் குற்றச்சாட்டு!!!

பாஜகவின் கீழ் செயல்படுகிறதா இந்தியாவின் துணை ராணுவம் ....ராஜஸ்தான் முதலமைச்சர் குற்றச்சாட்டு!!!

இந்தியாவின் துணை ராணுவத்தையும் காவல்துறையயும் பாஜக தவறாக பயன்படுத்துவதாக ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ராஜஸ்தான் முதலமைச்சர் குற்றச்சாட்டு:

பாஜக ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் உள்ள துணை ராணுவத்தினரையோ அல்லது காவல் துறையையோ அதன் கீழ் கொண்டு வர செய்து அவர்களின் விருப்பபடி செயல்பட வைக்கின்றனர் எனக் கூறியுள்ளார் அசோக் கெலாட்.  மேலும் அவர்களின் துணையோடு வாகனங்களில் பண்ம் நிரப்பி பாஜக அலுவலகங்களுக்கு கொண்டு செல்கின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.  
பணங்களை கொண்டு செல்லும் வாகனங்கள் காவல் துறை அல்லது துணை ராணுவத்தினருக்கு சொந்தமானது என்பதால் அதனை யாரும் சோதனை செய்வதில்லை எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.  ஆனால் மக்களோ அவர்கள் உதவிக்காக வந்திருப்பதாக இன்னும் எண்ணி கொண்டிருக்கிறார்கள் எனவும் அசோக் கெலாட் பேசியுள்ளார்.

பணபதிப்பு இழப்பு திட்டம்:

பிரதமர் நரேந்திர மோடி ரூ.500 ரூ.1000 நோட்டுகளில் பணமதிப்பு இழப்பைக் கொண்டு வந்து அவர்கள் எளிதாக கொண்டு செல்லும் வகையில் ரூ. 2000 அறிமுகப்படுத்தினார் எனவும் விமர்சித்துள்ளார் அசோக் கெலாட்.

பெரிய சதி:

நாட்டில் பெரிய சதி நடக்கிறது எனவும் ஆனால் மக்கள் பயப்பட தெவையில்லை எனவும் இறுதி வெற்றி காங்கிரஸ் பெறும் எனவும் அசோக் கெலாட் உறுதியாக கூறியுள்ளார்.

பாஜக பதிலடி:

ராஜஸ்தான் முதலமைச்சரின் பேச்சு அடிப்படையற்றது, அர்த்தமற்றது, ஆதாரமற்றது என ராஜஸ்தானின் மாநில தலைவர் சதீஷ் பூனியா கூறியுள்ளார்.

முதலமைச்சர் அவருடைய பதவியை காப்பாற்றி கொள்ள இவ்வாறு பேசி மக்களை திசை திருப்ப பார்க்கிறார் கூறியுள்ளார் சதீஷ் பூனியா.  மேலும் நாட்டின் உள் மற்றும் வெளி பாதுகாப்பை பராமரிக்கும் துணை ராணுவத்தையும் காவல் துறையையும் அவமதித்ததற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் பூனியா அறிவுறித்தியுள்ளார்.

அசோக் கெலாட் கண்ணியமற்ற முறையில் பேசியுள்ளதாகவும் பாஜக மாநில தலைவர் கூறியுள்ளார்.  மேலும், காங்கிரஸ் பணமதிப்பீடு இழப்பை பற்றி பேசுகிறது; அதற்கு காரணம் அவர்கள் பதுக்கிய பணம் குப்பையாக மாறியதே எனவும் கூறியுள்ளார்.

இதையும் படிக்க: இந்தியாவையும் பணக்கார நாடாக மாற்றலாம்!!!! : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்