வங்கதேசத்தை சேர்ந்தவருக்கு மத்திய அமைச்சர் பதவியா? பதில் சொல்லுங்க பிரதமரே!  

மத்திய இணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள நிசித் பிராமணிக்கின் பிறப்பிடம் வங்கதேசமா என்பதை பிரதமர் மோடி தெளிவுப்படுத்தும்படி  காங்கிரஸ் எம்.பி  ரிபுன் போரா கேட்டுக்கொண்டுள்ளார். 

திரிணாமுல் காங்கிரஸிலிருந்து விலகி, கடந்த 2019ம் ஆண்டு பாஜகவில் இணைந்த நிசித் பிராமணிக் மேற்கு வங்கத்தில் உள்ள கூச் பெஹார் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். அண்மையில் இவர் மோடி தலைமையிலான புதிய அமைச்சரவையில் உள்துறை இணை அமைச்சராக அறிவிக்கப்பட்டார்.

இவருக்கு பாராட்டு தெரிவித்தும், வங்கதேச குடிமகன் என குறிப்பிட்டும் வங்கதேசத்தை சேர்ந்த ஒருவரின் முகநூலில் வெளியிடப்பட்டிருந்தது. இதுகுறித்து திரிணாமுல் காங்கிரஸை சேர்ந்த பார்த்தா பிரதிம் ரே ஏற்கனவே சந்தேகம் கிளப்பியிருந்த நிலையில், தற்போது ரிபுன் போராவும் சந்தேகத்தை எழுப்பி மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.