75வது சுதந்திர தின அடையாளத்துடன் ரூ.1,ரூ.2,ரூ.5, ரூ.10 மற்றும் ரூ.20 நாணயங்கள் வெளியீடு!

75வது சுதந்திர தினத்தின் அடையாளத்துடன் கூடிய நாணயங்களை பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார்.

75வது சுதந்திர தின அடையாளத்துடன் ரூ.1,ரூ.2,ரூ.5, ரூ.10 மற்றும் ரூ.20 நாணயங்கள் வெளியீடு!

டெல்லி விக்யான் பவனில் நிதி மற்றும் கார்ப்பரேட் விவகார அமைச்சகங்கள் சார்பில் 75வது சுதந்திர தினத்தை கொண்டாடிடும் வகையில் ஒரு வார சிறப்பு கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியை தொடக்கி வைத்த பிரதமர் மோடி, 75வது சுதந்திர தினத்தின் அடையாளங்களுடன் 1, 2, 5, 10 மற்றும் 20 ரூபாய் நாணயங்களை வெளியிட்டார். இந்த நாணயங்களை கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளும் எளிதில் அடையாளம் கண்டுவிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், கடந்த 8 ஆண்டுகளாக நாட்டின் வளர்ச்சியில் மக்களின் பங்களிப்பு அதிகரித்துள்ளதாகவும், ஸ்வச் பாரத் அபியான் திட்டத்தின் மூலம் ஏழைகள் கண்ணியமான வாழ்க்கை வாழவும் வழிவகை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.