அக்னிபத் திட்டம்: மோடியிடம் முப்படை தளபதிகள் இன்று விளக்கம்...!

அக்னிபத் திட்டம் குறித்து இன்று பிரதமர் மோடியை சந்தித்து முப்படை தளபதிகள் விளக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அக்னிபத் திட்டம்: மோடியிடம் முப்படை தளபதிகள் இன்று விளக்கம்...!

ராணுவத்தில் குறுகிய காலத்துக்கு சேவையாற்றும் வகையில் அக்னிபாத் என்னும் புதிய திட்டத்தை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சில நாட்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தியிருந்தார்.

ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் ராணுவத்தில் சேர விரும்பும் இளைஞர்கள் திட்டத்தை உடனடியாக திரும்ப பெற கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் இது குறித்து ராஜ்நாத் சிங் தலைமையில் முப்படை தளபதிகள் ஆலோசனை நடத்திய நிலையில் திட்டத்தை திரும்ப பெற முடியாது என மத்திய அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டது.

ஆனால் இளைஞர்கள் திட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்பதில் உறுதியுடன் உள்ளனர். இந்த நிலையில் அக்னிபத் திட்டம் குறித்து பிரதமர் மோடியை முப்படை தளபதிகள் தனித்தனியே சந்தித்து விளக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.