”தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தரமுடியாது” கர்நாடக அரசு அறிவிப்பு!

”தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தரமுடியாது” கர்நாடக அரசு அறிவிப்பு!

காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது. 


தமிழ்நாட்டிற்கு உரிய நீர் திறக்க காவிரி ஆணையம் உத்தரவிட்டும், கர்நாடக அரசு அதனை செயல்படுத்தவில்லை. இதனால், தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க உத்தரவிடக் கோரி, தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. மேலும், தமிழ்நாட்டிற்கு திறக்கப்படும் நீரின் அளவைக் குறைக்க வேண்டும் என கர்நாடக அரசும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த இரு மனுக்களையும் விசாரித்த நீதிபதிகள், காவிரி அணையின் நீர் இருப்பு, தமிழ்நாட்டிற்கு திறக்கப்படும் நீரின் அளவு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து, செப்டம்பர் 1-ம் தேதி காவிரி மேலாண்மை ஆணையம் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.  

இதையும் படிக்க : உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கு கூடுதலாக மானியம் அறிவிப்பு!

இது குறித்து ஆய்வு செய்யும் வகையில், டெல்லியில், காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம்  நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கர்நாடகா, கேரளா, தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களின் நீர்வளத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். அதில், காவிரியில் மொத்தம் 47 சதவீதம் நீர் மட்டுமே இருப்பதால், அதனை குடிநீர் தேவைக்கு மட்டுமே பயன்படுத்த முடியும் என்றும், எனவே, தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தரமுடியாது என்றும் கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.