முல்லைபெரியாறு அணை: தமிழக முதல்வருக்கு கேரள முதல்வர் கடிதம்

முல்லைப் பெரியாறு அணையை திறக்கும் முன், அணையின் கீழ்பகுதியில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கூறி உள்ளார்.

கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. விரைவில் முழு கொள்ளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.  முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு இரண்டாயிரத்து 109 கன அடியாகவும், தண்ணீர் திறப்பு ஆயிரத்து 750 கன அடியாகவும் உள்ளது.  மழை தீவிரமடையும்பட்சத்தில் அணை மொத்த நீர்மட்டமான 142 அடியை எட்டலாம் என அஞ்சப்படுகிறது.

எனவே, முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழகத்திற்கு அதிக தண்ணீரை எடுத்துச் செல்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கேரள முதலமைச்சர் பிரனாயி விஜயன் கடிதம் எழுதி உள்ளார். அணையை திறக்கும் முன், அணையின் கீழ்பகுதியில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்ட அவர், இதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில், ஷட்டர்களை திறப்பதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பே கேரள அரசிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.