புதுமுகங்களுக்கு வாய்ப்பு...மூத்த தலைவர்களை இழக்கும் பாஜக!

புதுமுகங்களுக்கு வாய்ப்பு...மூத்த தலைவர்களை இழக்கும் பாஜக!

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால், கட்சியில் இருந்து விலகுவதாக மூத்த பாஜக தலைவர் லக்ஷ்மண் சவடி அறிவித்துள்ளார்.

கர்நாடகாவில் வரும் 10ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், 222 தொகுதிகளில் 189 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பாஜக அறிவித்தது. இதில் 52 புதுமுகங்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ள நிலையில், காங்கிரசில் இருந்து கட்சி மாறியவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. இதனால், கட்சியில் உள்ள மூத்த தலைவர்களுக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. எனவே, கட்சியின் மூத்த தலைவர்களின் ஆதரவாளர்கள் விடிய விடிய போராட்டங்களில் ஈடுபட்டனர். 

இதையும் படிக்க : அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை...கலக்கத்தில் இல்லத்தரசிகள்!

இந்நிலையில் எடியூரப்பாவின் தீவிர ஆதரவாளரும், முக்கியத்துவம் வாய்ந்த லிங்காயத் தலைவர்களில் ஒருவருமான பாஜகவின் லக்ஷ்மண் சவடி, காட்கா தொகுதியில் போட்டியிட வாய்ப்பளிக்காததால் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். பாஜகவின் இந்த அதிரடி முடிவால், கட்சியின் மூத்த தலைவர்களை அடுத்தடுத்து இழக்குமா பிஜேபி என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்...