மம்தா பானர்ஜியின் முடிவு பாஜகவுக்கே சாதகம்-சிவசேனா விமர்சனம் ...

காங்கிரஸ் இல்லாத கூட்டணி என்கிற முடிவின் மூலம் மம்தா பானர்ஜி பாஜக வெற்றிக்கு உதவி வருகிறார் என சிவசேனா கட்சியின் செய்தி தொடர்பாளர் சஞ்சய் ராவத் மீண்டும் விமர்சித்துள்ளார்.

மம்தா பானர்ஜியின் முடிவு பாஜகவுக்கே  சாதகம்-சிவசேனா விமர்சனம் ...

வரும் 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் இல்லாத மாற்று அணிணை அமைக்கும் முயற்சியில் மேற்குவங்க முதலமைச்சரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி ஈடுபட்டுள்ளார். இதன் தொடக்கமாக கோவா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் இல்லாத அணியை உருவாக்கி அங்கு திரிணமூல் காங்கிரஸ் போட்டியிடுகிறது. மம்தா பானர்ஜியின் இந்த நடவடிக்கையால் கோவாவில் பாஜக எளிதாக வெற்றி பெரும் என சஞ்சய் ராவத் கூறியுள்ளார். இதே நிலை தொடர்ந்தால் 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எளிதில் வெற்றி பெரும் எனவும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.