லட்சத்தீவில் மருத்துவ கல்லூரியா?

லட்சத்தீவில் துணை மருத்துவ கல்லூரியை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக நிர்வாக அதிகாரி அறிவித்துள்ளார்.

லட்சத்தீவில் மருத்துவ கல்லூரியா?

லட்சத்தீவில் துணை மருத்துவ கல்லூரியை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக நிர்வாக அதிகாரி அறிவித்துள்ளார்.

லட்சத்தீவுகளுக்கான மத்திய அரசு அதிகாரியாக குஜராத்தைச் சேர்ந்த பிரபுல் கோடா படேல் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் மாட்டுக்கறிக்கு தடை போன்ற அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டதை தொடர்ந்து பிரபுல் கோடா படேலை திரும்பப் பெற மத்திய அரசுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இந்த நிலையில் தலைநகர் காவரட்டியில் துணை மருத்துவக் கல்லூரி அமைக்க முடிவு செய்துள்ளதாக  பிரபுல் கோடா படேல் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மருத்துவ ஆய்வக தொழில்நுட்பத்தில் டிப்ளோமா, எக்ஸ்ரே தொழில்நுட்பத்தில் டிப்ளோமா, ஆபரேஷன் தியேட்டர் தொழில்நுட்பத்தில் டிப்ளோமா, கண் உதவியாளர் சான்றிதழ் போன்ற 5 மருத்துவ பிரிவுகளை கொண்ட துணை மருத்துவ கல்லூரி அமைக்கப்படும் என்றும் பாரத் சேவக் சமாஜ் அமைப்புடன் இணைந்து இத்திட்டம் செயல் படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.