கொசுக்களின் பெருக்கத்தை தடுக்க மேற்கு வங்கத்தில் புதிய முயற்சி

மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் விதமாக கழிவு நீர் கால்வாய் உள்ளிட்ட நீர் தேங்கும் பகுதிகளில் கப்பி மீன்கள் விடப்பட்டன.

நாட்டில் ஒரு பக்கம் கொரோனா பரவல் மக்களை வாட்டி வரும் நிலையில் மறு பக்கம் டெங்கு காய்ச்சல் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

இதனை கட்டுப்படுத்தும் விதமாகவும் கொசுக்களில் பெருக்கத்தை அழிக்கும் விதமாகவும் மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியில், கழிவு நீர் கால்வாய் உள்ளிட்ட நீர் தேக்க பகுதிகளில் மாநகராட்சி சார்பில் கப்பி மீன்கள் விடப்பட்டன.

இவ்வகை மீன்கள் கொசுக்களின் குட்டைகளை உணவாக உட்கொள்வதன் மூலம் கொசுக்களின் பெருக்கம் கட்டுப்படுத்தப்படும் என்று தெரிவிக்கின்றனர். அதன்படி சுமார் 2 லட்சம் கப்பி மீன்களை மாநகராட்சி அதிகாரிகள் நீர் தேங்கும் பகுதிகளில் விட்டுள்ளனர்.