முழுசா விவரம் தெரியாமா யாரும் பேசக்கூடாது! முதல்வர் காட்டம்!  

ஜம்மு காஷ்மீர் விவகாரம் உள்ளிட்ட உணர்வு பூர்வமாக விவகாரங்கள் குறித்து முழுமையாக தெரியாமல் பேசக் கூடாது என பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் சித்துவின் ஆலோசகர்களுக்கு, அம்மாநில முதலமைச்சர் அம்ரீந்தர் சிங் அறிவுறுத்தியுள்ளார்.

சித்துவின் ஆலோசகாராக சமீபத்தில் நியமிக்கப்பட்ட மல்விந்தர் மாலி, ஜம்மு காஷ்மீர் இந்தியா பாகிஸ்தான் இரு நாடுகளுக்கும் சொந்தமானது அல்ல என்றும் அதுவொரு தனிநாடு எனவும் பேசினார். அவரது இந்தப் பேச்சுக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் இதேபோன்றதொரு சர்ச்சைக்குரிய கருத்தை மற்றொரு ஆலோசகரான பியாரே லால் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் மற்றும் இந்தியா பாகிஸ்தான் விவகாரம் குறித்து முழுமையாகத் தெரியாமல் பேச வேண்டாம் என அம்ரீந்தர் சிங் தெரிவித்துள்ளார். அவர்கள் இருவரது கருத்தும் தேச விரோதாமானது எனவும் குறிப்பிட்டுள்ளார். பஞ்சாப் மாநில காங்கிரசில் மாநில தலைவர் சித்துவுக்கும், முதலமைச்சர் அம்ரீந்தர் சிங்கிற்கும் தொடர்ந்து மோதல் போக்கு நீடித்து வருகிறது. இந்நிலையில் சித்துவின் அரசியல் ஆலோசகர்கள் குறித்து இரண்டாவது முறையாக அம்ரீந்தர் சிங் இதுபோன்ற கருத்துக்களை தெரிவித்துள்ளார்